Monday, January 28, 2008

லேசோ டூல் மற்றும் மேஜிக் வேண்ட் டூல்

போன பதிவில் பார்த்த செலக்சன் டூல்க்கு கீழே இருப்பது லேசோ டூல் அதுவும் செலக்ட் செய்யதான் பயன் படுகிறது, என்ன இது கலர் கலராக மாற்றலாம் என்று சொல்லிவிட்டு செலக்சன் டூல்ஸாக சொல்லிதருகிறானே என்று நினைக்கவேண்டாம். செலக்சன் டூல்ஸை ஒழுங்காகபயன் படுத்த தெரிந்து கொண்டால் கலர் மாற்றுவது என்பது ஒரு 2 நிமிடவேலை.
அதுபோல் லேசோ டூலிலும் மூன்று வகை இருக்கிறது.

லேசோ டூல்


பாலிகன் லேசோ


மேக்னட்டிக் லேசோ


லேசோ
முதல் டூலை கிளிக் செய்து விட்டு படத்தின் மேல் ஆரம்பத்தை கிளிக் செய்து மவுசை தேர்வு செய்யவேண்டிய பகுதியில்மூவ் செய்து ஆரம்பித்த புள்ளி அருகே கொண்டு வந்து கிளிக்கை ரிலீஸ் செய்தால் அந்த பகுதி முழுவதும் செலக்ட் ஆகி இருக்கும்.


பாலிகன் லேசோ
இது முதலில் பார்த்த லேசோ டூலைவிட கொஞ்சம் வித்தியாசமானது, முதல் டூலில் முதல் மற்றும் ஆரம்ப புள்ளியை மட்டும் தான் கொடுக்க முடியும்,கொஞ்சம் வலைவு நெளிவான இடத்தில் அது ஒத்து வராது கையை விட்டால் தவறாக செலக்ட் ஆகிடும், பின் திரும்ப முதலில் இருந்து செலக்ட் செய்யவேண்டும்,ஆனால் பாலிகன் லேசோவில் ஒவ்வொரு கிளிக்கா கிளிக் செய்து அடுத்த அடுத்த நகர்வை சொல்லவேண்டும், பின் திரும்ப ஆரம்பித்த புள்ளி அருகே வந்தால் பாலிகன் லேசோடூல் கீழே ஒரு சிறியவட்டம் வரும் அப்படி என்றால் ஆரம்ப புள்ளி அருகே சரியாக வந்துவிட்டோம் என்று அர்த்தம், பின் கிளிக் செய்து முடித்தால் அந்த பகுதி மட்டும் செலக்ட் ஆகி இருக்கும்.


மேக்னட்டிக் லேசோ
இது நான் முதல் கிளிக் செய்து விட்டு படத்தின் மேல் நகர்த்தினால் அதுவாக பாயிண்டை பிக்ஸ் செய்து அகழகாக செலக்ட் செய்யும், இது பாதிவேலையை மிச்ச படுத்தும்.


இப்படி எல்லாம் ஒரு வகையில் செலக்ட் செய்யலாம்.
சரி இப்படி எல்லாம் கஷ்ட்டபட்டு செலக்ட் செய்யுறீங்க தவறுதலாக போட்டோ ஷாப் குளோஸ் ஆகிடுது அல்லது நீங்க வேறு எதையாவது செய்ய போய் செலக்ட் செய்துவைத்து இருக்கும் ஏரியா டி-செலக்ட் ஆகிவிடுகிறது அப்ப திரும்ப மறுபடியும் முதலில் இருந்து திரும்ப செலக்ட் செய்யனு.


இந்த குறைய போக்குவதுதான் பென் டூல், போட்டோஷாப்பின் கிங் டூல் இதுதான், இதை ஒருவன் பயன்படுத்துவதை வைத்தே எத்தனை வருடமாக இவன் போட்டோஷாப் யூஸ் செய்கிறான்என்று சொல்லிட முடியும்.
இதை ஒழுங்காக யூஸ் செய்ய வந்துவிட்டால் மற்ற டூல்ஸ் எல்லாம் அவசியமே இல்லை.


அதை அடுத்த பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்.


லேசோ டூல் அருகில் இருக்கும் மேஜிக் வேண்ட் டூல் எங்கு உபயோக படுத்தலாம் என்றால், பேக்ரவுண்ட் கலர் ஒரே மாதிரி இருக்கும் பொழுது அப்பொழுது அந்த பின்னனியை செலக்ட் செய்யவேண்டும்என்றால் அப்பொழுது போய் மற்ற டூல் மூலம் செலக்ட் செய்தால் டைம் தான் வேஸ்ட்.

அந்த மேஜிக் வேண்ட் டூலை எடுத்து எந்த கலரை செலக்ட் செய்யவேண்டுமோ அதன் மீது ஒரு கிளிக் செய்தால் எங்கு எல்லாம் அதே கலர் தொடர்ச்சியாக இருக்கிறதோ, அது முழுவதும்செலக்ட் ஆகிவிடும்.அதன் மேலே இருக்கும் டாலரன்ஸ் என்ற இடத்தில் அதிகம் கொடுக்க கொடுக்க செலக்ஸன் அதிகமாக இருக்கும். மேலும் சில இடங்களை சேர்க்க வேண்டும் என்றால் Shift கீயை அழுத்திக்கொண்டுஎதை எதை எல்லாம் சேர்க்கவேண்டுமோ அல்லது விடுபட்ட இடத்தை கிளிக் செய்தால் அதுவும் சேர்ந்து செலக்ட் ஆகிவிடும்.






இது டாலரன்ஸ் 30 இருக்கும் பொழுது பின்னனி நீல கலர் மேல் கிளிக் செய்தது.















இது டாலரன்ஸ் 50 இருக்கும் பொழுது ஒரே ஒரு கிளிக்.







இது டாலரன்ஸ் 60 + விடு பட்ட இடத்தை shift கீயை அழுத்திக்கொண்டு மீதி இடத்தை கிளிக் செய்தது.

Thursday, January 3, 2008

போட்டோஷாப்பில் இருக்கும் செலக்சன் டூல்


Rectangular marquee டூல்.

elipitical marquee

single column marquee

single row marquee


போட்டோ ஷாப்பில் டூல் பாக்ஸில் இருக்கும் முதல் டூல் Marquee டூல். நாம் பார்க்கும் பொழுது சதுர வடிவில் இருக்கும் அதன் ஓரத்தில் இருக்கும் சிறு கறுப்பு புள்ளி போன்று இருக்கும் இடத்தை கிளிக் செய்தால் elipitical marquee, single Row marquee, single column marquee என்று மேலும்பல marquee tool உள்ளே இருக்கும்.


எதுவும் சதுர வடிவமாக செலக்ட் செய்யவேண்டும் என்றால் சதுரவடிவில் இருக்கும் marquee டூலை எடுத்து படத்தின் அல்லது லேயரின் மேல் ஒரு கிளிக் செய்து அப்படியே மவுசை டிராக் செய்யவேண்டும், பின் கிளிக் செய்து இருப்பதை விட்டால் அந்த இடம் மட்டும் செலக்ட் ஆகும்.



அதே போல் வட்ட வடிவமாக செலக்ட் செய்யவேண்டும் அல்லது நீள் வட்டம் போல செலக்ட் செய்யவேண்டும் என்றால் elipitical marquee யை எடுத்துசெலக்ட் செய்யலாம்.




ஒரெ ஒரு கோட்டை மட்டும் செலக்ட் செய்யவேண்டும் என்றால் single Row marquee, single column marquee யை வைத்து செலக்ட் செய்யலாம்.




சரி ஒரு சதுரம் போலவும் அதன் ஓரத்தின் மற்றொரு சின்ன சதுரம் வேண்டும் என்றால் என்ன செய்வது. இப்படி படத்தில் காட்டி இருப்பது போல் எல்லாம் செலக்ட் செய்யவேண்டும்என்றால்












இங்கு படத்தில் இருக்கும் பட்டையில் காட்டி இருக்கும் இடத்தில் இருக்கும் மூன்று முறையான செலக்சன் மூலம் ஒரு கட்டத்தோடு அல்லது வட்டத்தோடு இன்னொரு சின்ன கட்டத்தை அதனுடன் இணைக்கவோ அல்லது அல்லது அதில் இருந்து குறைக்கவோ முடியும்.




குறிப்பு: நீங்க செலக்ட் செய்து இருக்கும் டூல் பெயர் தெரியவில்லை என்றால் அதன் மேல் ஒரு வினாடி மவுசை அங்கு வைத்தால் என்ன டூல் என்று டூல் பெயர் டீல் டிப்ஸில் வரும்.




Wednesday, December 26, 2007

பழைய கிழிந்த புகைப்படங்கள் அல்லது கருப்பு வெள்ளை படங்களை கலராக எப்படி மாற்றுவது?

இதோ இங்கிருக்கும் பழைய புகைப்படத்தை கொஞ்சமாக மாற்றி கலர் செய்து, அதில் சில மாறுதல்கள் செய்து இருக்கிறேன். கலர் மாற்றுவது மிகவும் எளிது. முதலில் கலர் மாற்ற சில டூல்ஸ் உபயோக்கிக கற்றுக்கனும்.
இல்லை என்றால் கலர் கொடுக்கும் பொழுது சரி வராது. முக்கியமாக செலக்சன் டூலை நன்றாக பயன் படுத்த தெரியவேண்டும். அதன் மூலமாக செலக்ட் செய்த ஏரியாவை மிக சுலபமாக கலர் மாற்றலாம். படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கி வித்தியாசத்தை பாருங்கள்.
ஒரிஜினல் புகைப்படம்



கொஞ்சமாக அதில் இருக்கும் சிராய்புகளை எடுத்த பின், தொப்பி மட்டும் கலர்.

முழுவதுமாக சிராய்புகள் இல்லை, பல இடங்களில் கலர் ஆக மாறி இருக்கிறது. இதை பற்றிதான் இனி வரும் பாடம், எப்படி எப்படி எல்லாம் செலக்ட் செய்யலாம் என்று கற்றுக்கொண்டால் பாதி போட்டோ சாப் பாடம் முடிந்தது. அடுத்த பதிவில் செலக்ட் செய்வது எப்படி?

Sunday, December 23, 2007

எளிதாக பல புகைப்படங்களை எடிட் செய்வது எப்படி?( Action பயன்)

ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை ஒரே மாதிரி எடிட் செய்யவேண்டும் என்றால் திரும்ப திரும்ப ஒன்று ஒன்றாக செய்யாமல் ஒரு முறை செய்ததையே மற்ற படங்களுக்கும் தானாக செய்வது போல் போட்டோ ஷாப்பில் நாம் செய்ய முடியும்.

இதில் எந்தமாதிரி எடிட்டிங் வேண்டுமானாலும் செய்யலாம். உதாரணத்துக்கு போன பதிவில் நாம் பார்த்த இமேஜ் சைஸ் குறைப்பதையே இங்கு எப்படி பலபடங்களுக்கு தானாக செய்யவைப்பது என்று பார்க்கலாம்.

முதலில் உங்களுக்கு எடிட் செய்யவேண்டிய புகைப்பட தொகுப்பு இருக்கும் இடத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை ஓப்பன் செய்தபின் மேலே மெனுவில் இருக்கும் window வில் Action என்று ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்யவேண்டும் அல்லது Alt+f9( function key) கிளிக் செய்தால் படத்தில் இருப்பது போல்

புது விண்டோ என்று இருக்கும் அதன் மேல் மூலையில் இருக்கும் சிறு அம்புகுறி (படத்தில் சிகப்புகலர் கட்டம்கட்டி இருப்பது) அதை கிளிக் செய்தால் மற்றொரு window ஓப்பன் ஆகும் அதில் New Action என்று இருப்பதை கிளிக் செய்தால் ஒரு பாப் அப் விண்டோவில் Action Name என்று இருக்கும் அதில் Resize என்று நான் கொடுத்து இருக்கிறேன் நீங்கள் உங்கள் வசதிக்கு ஒரு பெயர் கொடுத்து Record யை கிளிக் செய்தால் இனி நீங்கள் செய்யபோகும் அனைத்தும் அந்த Actionல் Record ஆகும்.

நீங்கள் என்ன என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை எல்லாம் செய்துவிட்டு (image->imagesize-> 25%) வேறு ஒரு புதிய Folderl அதே பெயரில் jpg ஆக Save செய்துவிட்டு. மறக்காமல் அந்த படத்தை close செய்துவிடுங்கள். பின் அந்த Action window வில் இருக்கும் கீழே இருக்கும் சதுர வடிவ Stop ஐகானை கிளிக் செய்து நிறுத்திவிடுங்கள்.

பின் மெனுவில் file-> Automate->Batch யை கிளிக் செய்தால் ஓப்பன் ஆகும் விண்டோவில் உங்களுக்கு எடிட் செய்யவேண்டிய புகைபடங்கள் இருக்கும் folder யை தேர்வு செய்து பின் Action என்று இருக்கும் இடத்தில் நீங்கள் Actionக்கு கொடுத்த பெயரை தேர்வு செய்து ஓக்கே கொடுத்துவிட்டுபோய் வேறு வேலை ஏதாவது இருந்தால் பார்த்துவிட்டு வாங்க. அனைத்து படங்களும் அளவு குறைந்து நீங்கள் Save செய்த புது folderல் இருக்கும்.

குறிப்பு:
1) படத்தை ஓப்பன் செய்தபிறகே new Action கொடுக்கவேண்டும்.

2) save செய்யும் பொழுது பெயர் மாற்றம் செய்ய கூடாது, new folderல் தான் சேமிக்கவேண்டும்.

3) மறக்காமல் படத்தை close செய்துவிடவேண்டும் (இல்லை என்றால் அத்தனை புகைப்படங்களும் போட்டோஷாப் உள் ஓப்பன் ஆகியிருக்கும்.

4) புதிதாக Action பெயர் கொடுக்கும்பொழுது என்ன செய்யபோகிறீகளோ அதுக்கு தகுந்த பெயர் கொடுப்பது நலம், பல மாதங்களுக்கு பிறகு இதே வேலையை திரும்ப செய்யவேண்டும் என்றால் அப்பொழுது பல Action நீங்கள் உருவாக்கி வைத்து இருந்தால் எந்த Action யை தேர்வு செய்வது என்று குழப்பம் வரும். கலர் சேஞ்சுக்கு Action என்றால் colorchange என்று கொடுங்கள் இதை பல மாதத்துக்கு பிறகும் உபயோகப்படுத்தலாம்!!

இதில் சில சமயம் இதுபோல் செய்யும் பொழுது ஒரு தவறுவரும் அதை நீங்கள் செய்து பார்த்துவிட்டு என்ன தவறு வருகிறது என்று சொல்லுங்கள் அதை எப்படி சரி செய்யனும் என்று சொல்கிறேன்.

(நான் சொல்வது புதியவர்களுக்கு புரிகிறதா என்று சொல்லுங்கள் இல்லை என்றால் அனைத்தையும் படமாக தரமுயற்ச்சி செய்கிறேன்.)

புகைபடங்களை எடிட் செய்வது எப்படி? போட்டோஷாப் எடிட்டிங்

இன்று பலர் டிஜிட்டல் கேமிராவை உபயோக படுத்துகிறோம் அதில் எடுக்கும் புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பவேண்டும் என்றால் அந்த புகைபடத்தின் அளவும், file sizeம் அதிகமாக இருக்கும். நீங்கள் வைத்து இருக்கும் கேமிரா 5mp என்றாலே ஒரு புகைபடத்தின் சைஸ் குறைந்தது 4mb இருக்கும் மெயிலில் இரண்டு மூன்று போட்டோவுக்கு மேல் அனுப்ப முடியாது அவர் அதை பிரிண்ட் செய்யபோவது இல்லை சும்மா பார்க்கதான் என்றால் அதன் அளவையும் எப்படி குறைப்பது என்று முதலில் பார்க்கலாம் இதே ஒரு 200 போட்டோவின் அளவை குறைக்கனும் என்றால் எப்படி செய்யனும் என்பதையும் பிறகு பார்க்கலாம்.

முதலில் போட்டோசாப் file openல் குறிப்பிட்ட புகைப்படத்தை தேர்வு செய்துக்கொண்டு ஒகே கொடுத்தால் அந்த புகைப்படம் போட்டோ சாப் உள்ளே வந்து இருக்கும்.

இந்த புகைபடம் 25% view தான் உண்மையான அளவை பார்க்கவேண்டும் என்றால் ctrl+ alt+ 0 (சைபர்) கிளிக் செஞ்சா உண்மையான அளவு தெரியும்.

இப்படி இருக்கும் இன்னும் பாதி மேலும் கீழும் மறைந்து இருக்கு இப்படி இருந்தா எப்படி அனுப்ப முடியும்?

படத்தில் அம்பு குறியிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இருக்கும் பூட்டு மீது இரண்டு முறை கிளிக் செய்தால் ஒரு மெசேஜ் பாக்ஸ் ஓப்பன் ஆகும் அதுக்கு ஓக்கே என்று கொடுத்தால் அந்த பூட்டு ஐகான் காணாமல் போய்விடும்.

(பூட்டுக்கு அர்த்தம் அது இருக்கும் வரை அந்த லேயரில் இருக்கும் படத்தை எந்தவித மாற்றத்துக்கும் உட்படுத்த முடியாது. )

இப்பொழுது edit -> transform-> scale கிளிக் செய்யவும் அல்லது குறுக்குவழி ctrl+t கொடுத்தால் புகைப்படத்தை சுற்றி ஒரு நூல் வடிவத்தில் நான்கு மூலை மற்றும் நான்கு பக்க மையத்திலும் ஒரு சின்ன சதுரவடிவ கட்டம் இருக்கும் அதில் ஏதேனும் ஒரு மூலையில் கர்சரை கொண்டு சென்றால் அம்புகுறி மாறும் மாறிய பின் shift கீயை அழுத்திக்கொண்டு மவுசை டிராக் செய்யவும்

இப்படி சின்னதாக மாறும் shift கீயை அழுத்தி பிடித்து இருப்பதால் படம் உயரம், அகலம் இரண்டுமே ஒரே விகிதத்தில் சின்னதாக மாறும் இல்லை என்றால் உயரம் மட்டும் அப்படியே இருக்கும் அகலம் சின்னதாக மாறும்.



இப்படி ஆகும்.


பின் எந்த அளவு வேண்டுமோ அந்த அளவுக்கு சுருக்கிவிட்டு கிராப் டூலை எடுத்து
படதின் மீது முழுவதும் வரும் படி கிளிக் செய்து, enter யை தட்டினால் தேவை இல்லாத மீதி வெள்ளை பகுதி கட் ஆகி புகைபடம் மட்டும் இருக்கும். பின் file-> save as-> filename. jpg என்று jpg formateல் save செய்யவும்.
அப்பொழுது image quality 4 அல்லது 5 கொடுக்கவும். இப்பொழுது புகைபடத்தின் அளவும், file size ம் குறைந்து இருக்கும்.
இது ஒரு வழி இன்னொரு எளிய வழியும் இருக்கு.
மேலே இருக்கும் மெனுவில் image யை கிளிக் செய்தால் image size என்று (ctrl +Alt + i)ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓப்பன் ஆகும் அதில் முதலில் இருக்கும் pixel Dimension ல் இருக்கும் width & height என்று இருக்கும் இடத்தில் pixel க்கு பதில் % என்று மாற்றினால் width & height 100 என்று இருக்கும் அந்த இடத்தில் 25% அல்லது என்ன சைஸ் வேண்டுமோ அதை கொடுத்து ஓக்கே கொடுத்தால் சின்னதாக மாறிவிடும்.
இதை படம் போட்டு சொல்லவில்லை. நீங்களாக செய்துபார்க்கவும் சந்தேகம் இருந்தால் சொல்கிறேன். திரும்ப பழயபடி save as கொடுத்து JPG யில் save செய்துக்கவும்.
இதுவே ஒரு படம் இரண்டு படம் என்றால் இதை திரும்ப திரும்ப செய்யலாம். ஆனால் குறைந்தது 200 படம் எடிட் செய்யனும் என்றால் என்ன செய்யனும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பு: போட்டோ சாப் கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு இது மிகவும் போர் ஆக தெரியும் ஆனால் ஒன்றுமே தெரியாதவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் அதனால்தான் ஒவ்வொரு படியாக சொல்லி இருக்கிறேன்.

நன்றி: தாமதத்துக்கு மன்னிக்கவும், படிக்கலாம் வாங்க என்று பிளாக் ஆரம்பிச்சு அதை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் மிகவும் கஷ்டபட்டுவிட்டு போ என்று விட்டுவிட்டேன், பின் மை பிரண்டுதான் இணைத்து கொடுத்தாங்க அதனால் திரும்ப ஆரம்பிச்சுட்டேன், நன்றி மை பிரண்ட்.

Sunday, September 23, 2007

போட்டோஷாப் பகுதி1- ஆரம்பம்

போட்டோஷாப்பை ஓப்பன் செய்து file---> New கொடுத்தால் . இமேஜ்1 ல் இருப்பது போல் ஓப்பன் ஆகி இருக்கும்.
இமேஜ்1(பெரிதாக்க அதன் மேல் கிளிக் செய்யவும்)

முதலில் இருப்பது Name: Untitled-1 (என்று இருக்கும், நீங்கள் அதில் என்ன பெயர் வேண்டும் என்றாலும் கொடுத்துக்கலாம்)


அடுத்து இருப்பது preset சைஸ் (இது முன்பே அவர்கள் உருவாக்கி வைத்து இருக்கும் டெம்ளேட் சைஸ்) உதாரணத்துக்கு நீங்கள்A4 அளவு லெட்டர் பேட் டிசைன் செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு அதன் அளவு தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லைநீங்கள் அங்கு இருக்கும் டிராப் டவுன் பட்டனை அழுத்தினால் அதில் நிறைய மாறுப்பட்ட அளவுகள் கொடுக்க பட்டு இருக்கும்.


அதில் நீங்க விரும்பிய தேவைபடும் அளவை தேர்ந்து எடுத்துக்கலாம். எதுக்கு இந்த அளவுகள் என்றால் நான் வீடு கட்ட பிளான் போடுவது போல்இத்தனை அடி நீளம் இத்தனை அடி அகலம் என்று முன்பே முடிவு செய்து ஆரம்பிப்பது போல் இங்கேயே அளவுகள் கொடுக்கவேண்டும்.

இல்லை என்றால் நீங்களாக உயரம், அகலம் அளவுகளை கொடுக்கவேண்டும்.
அளவுகள்: 1) Pixels
2)Inches
3)cm
4)mm
5)Points
என்று பல அளவுகள் இருக்கின்றன, எது வேண்டுமோ அதை தேர்வு செய்துகொள்ளவும்.
அடுத்து Color Mode : RGB (பொதுவாக பிரிண்டிங் அல்லாத மற்ற உபயோகத்துக்கு)
CMYK (பிரிண்டிங் மட்டும்)
Gray Scale (கருப்பு வெள்ளை மட்டும்)
இப்படி உபயோகத்துக்கு தகுந்தபடி நாம் தேர்வு செய்யவேண்டும், நாம் இங்கு RGB கலரை எடுத்துக்கலாம்.
Background Contents: white யை தேர்ந்து எடுத்துக்கலாம்.
பின் ஓக்கே பட்டனை கிளிக் செய்யவும்.

ஏன் போட்டோஷாப் ?

முதலில் போட்டோஷாப் என்பது போட்டோக்களை எடிட் செய்ய பயன்படும் ஒரு சாப்ட்வேர், இதன் மூலமாக கருப்பு வெள்ளை படத்தை கலராக மாற்றுவது, பழை கிழிந்த படங்களை புதிதாக்குவது கூட்டத்தில் இருக்கும் ஒருவரை மட்டும் தனியாக காட்டுவது, அல்லது தனியாக இருப்பவரை கூட்டத்தோடு நிற்க்க வைப்பது. முகத்தை மட்டும் மாற்றுவது (மார்பிங்) இப்படி பல பயன்கள் இருக்கின்றன.இது வரை போட்டோஷாப்பில் அடுத்த அடுத்த மாற்றங்கள் (வெர்ஷன்கள்) வந்து இருக்கின்றன இப்பொழுது கடைசியாக போட்டோஷாப் 9, அதற்க்கு முன்பு போட்டோ ஷாப் CS2 (கிரியேட்டிவ் ஷூட்) போட்டோ ஷாப் CS போட்டோ ஷாப் 7 போட்டோ ஷாப் 6 என்று நிறைய இருக்கிறது இதில் ஒவ்வொன்றுக்கும் இடையே சின்ன சின்ன கூடுதல் வசதிகள் இருக்கும். உங்களுக்கு லேட்டஸ்ட் ஷாப்ட்வேர் கிடைக்க வில்லை என்றாலும்குறைந்த பட்சம் போட்டோஷாப் 7 வது அவசியம்.

நான் உபயோகப்படுத்துவது போட்டோ ஷாப் cs2 .(ஏதும் சொல்லி கொடுப்பதில் வித்தியாசம் இருந்தால் கேளுங்கள்) பார்த்துவிட்டு சொல்கிறேன்